கேரள மாநிலத்திலுள்ள இடுக்கியில் நடக்க மற்றும் வாய்பேச முடியாத சிறுவன் ஒருவனுக்கு மருத்துவர்கள் நடிகர் விஜய்யின் வசனங்களை கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisment

sebastian

சிறுவன் செபாஸ்டியன் பிறந்ததில் இருந்தே நடக்க மற்றும் பேச முடியாமல் இருந்திருக்கிறார். அதனை குணப்படுத்த வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே பல மருத்துவர்களை அனுகிவருகிறார்கள் சிறுவனின் பெற்றோர். ஆனால், எந்த பலனும் இல்லை என்று மருத்துவர்கள் ஒருநிலையில் கைவிட்டுவிட்டனர்.

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="932ba096-3d05-432f-af15-662595682ed7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300-02_7.jpg" />

Advertisment

அந்த சமயத்தில்தான் சிகிச்சைக்காக சிறுவன் செபாஸ்டினை ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது விஜய்யின் ‘செல்பி புள்ள’ பாடலை கேட்டு உடலை அசைத்துள்ளான். அதன்பின் மருத்துவர்களும் விஜய்யின் பாடல்களை வைத்தும், பஞ்ச் வசனத்தை வைத்தும் சிறுவன் செபாஸ்டியனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறவியில் இருந்தே நடக்க முடியாமலும், வாய் பேச முடியாமலும் இருந்த சிறுவன் செபாஸ்டியன் தற்போது நடக்கவும், ஓரளவிற்கு பேசவும் செய்கின்றான் என்று அவரது குடும்பம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கின்றனர்.

Ilayaraja